Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்துடன் முருகதாஸ் திடீர் சந்திப்பு? பின்னணி என்ன?... தீயாய் பரவும் தகவல்

அஜித்துடன் முருகதாஸ் திடீர் சந்திப்பு? பின்னணி என்ன?... தீயாய் பரவும் தகவல்
, திங்கள், 27 ஜூன் 2022 (09:32 IST)
அஜித்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் சந்தித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்குப் பின்னர் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரின் அடுத்த படம் ஒரு அனிமேஷன் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அஜித்தை சந்தித்து கதையொன்றை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் ஏற்கனவே தனது அடுத்த படத்தை இயக்க விக்னேஷ் சிவனை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அதற்கடுத்த படத்துக்காக முருகதாஸ் உள்ளிட்ட வேறு சில இயக்குனர்களும் அவரிடம் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித்தும் முருகதாஸும் இணைந்த தீனா திரைப்படம் 2001 ஆம் ஆம்ண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2500 கோடி ரூபாய் சம்பளம்… மன்னிப்புக் கடிதம் கொடிக்கும் டிஸ்னி? மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக ஜானி டெப்?