Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ரசிகர்களின் விலையில்லா விருந்தகத்தில் அன்னதானம் செய்த அஜித் ரசிகர்கள்!

ajith vijay fans1
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:23 IST)
விஜய் ரசிகர்களின் விலையில்லா விருந்தகத்தில் அன்னதானம் செய்த அஜித் ரசிகர்கள்!
கோவையில் விஜய் ரசிகர்கள் நடத்தி வரும் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள் அன்னதானம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கோவை உள்பட 12 இடங்களில் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்தகம் என்ற அன்னதான நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள் என்பதும் இதில் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு தினமும் அன்னதானம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித்தின் 30 ஆண்டு திரையுலக நிறைவு விழாவை முன்னிட்டு விஜய் ரசிகர்களின் விலையில்லா விருந்தகத்தில் அன்னதானம் செய்தனர்.
 
நேற்று முழுவதும் அஜித் ரசிகர்கள் அன்னதான செலவை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது இதுகுறித்து அஜித் ரசிகர் ஒருவர் கூறியபோது விஜய் ரசிகர்களும் நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என்று எனக்கே பல விஜய் ரசிகர்கள் நண்பர்களாக உள்ளனர் என்றும் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணைந்து தான் செயல்பட்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் மரணம் !