அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைதன் பெற்றது.
உலகளவில் இந்த படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி நான்காவது வாரம் தொடங்கியுள்ளதாலும், அடுத்தடுத்து ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருவதாலும் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து குட் பேட் அக்லி தூக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் படம் ரிலீஸாகி நான்கு வாரங்கள் கழித்து தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது குட் பேட் அக்லி. தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பு ஓடிடியிலும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.