Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!

vinoth
சனி, 28 ஜூன் 2025 (08:50 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். தற்போது தன்னுடைய கனவான கார் ரேஸ் பந்தயங்களில் மீண்டும் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ள அஜித், வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கும் முடிவில் உள்ளாராம்.

குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றியக் கலைஞர்களே இந்த படத்திலும் பணியாற்ற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ‘அஜித் 64 பட அப்டேட் விரைவில்” என தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓ இது அந்த பாம்-ஆ… கவனம் ஈர்க்கும் அர்ஜுன் தாஸின் ‘பாம்’ டீசர்?

உலக சினிமா: வெளியானது ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் மூன்றாம் பாகம்!

ஜானகி என்று பெயர் இருந்தால் என்ன தவறு?... தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் கேள்வி!

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments