Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் அஜித் & அருண் விஜய்… மகிழ் திருமேனி போடும் ஸ்கெட்ச்!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (08:09 IST)
அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய், அஜித்தோடு என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அருள்நிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments