Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 61 படப்பிடிப்பு நிறுத்தமா?…. இணையத்தில் பரவிய தகவலால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (08:59 IST)
அஜித் நடித்து வரும் படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அஜித் ஐரோப்பாவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி முடித்தார்.

இதையடுத்து இப்போது அஜித் இந்தியா திரும்பி விட்டதால் மீண்டும் அவர் இருக்கும் காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் அஜித் 61 படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற போலிஸார் அங்கிருந்த கேமராக்களை பறிமுதல் செய்து சென்றதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments