Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’துணிவு’’ பட அஜித்தின் 2 வது சிங்கில் பாடல் நாளை ரிலீஸ்

ajithkumar
, சனி, 17 டிசம்பர் 2022 (14:28 IST)
அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  துணிவு.

இத்திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்தான் வாரிசு படத்தையும் வெளியிடுவதால், இரு படங்களுக்கும் சம அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே துணிவு படத்தின் முதல் சிங்கில் சில்லா சில்லா பாடல் கடந்த  9 ஆம் தேதி  வெளியானது.

இந்த பாடல் அஜித் ரசிகர்களையும், பொதுவான ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமானோரால் இந்த பாடல் இணையத்தில் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘காசேதான் கடவுளடா’ விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், நாளை மாலை இப்பாடல் வெளியாகும் என ஹெச்.வினோத் அறிவித்துள்ளார்.

ஜிப்ரான் இசையில் இப்பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பர் ஒன் நடிகர் அஜித்தும் இல்லை விஜய்யும் இல்லை: திருப்பூர் சுப்பிரமணியன்