Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்ட ஐஸ்வர்யா! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (09:25 IST)
பிக்பாஸ் வீட்டில் விஜயலட்சுமி வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்ததில் இருந்தே அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக உள்ளார். குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் அவர் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் இருவரும் விஜயலட்சுமியை வெளியேற்ற பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கின்போது விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்டு அனைவரும் விஜயலட்சுமிக்கு முதலுதவி செய்யும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கள்ளாட்டம் ஆடுகிறார். ஆனால் எப்போதும் விழிப்புடன் இருக்கும் ஜனனி இதனை கண்டுபிடித்து தட்டிக்கேட்க, அதற்கு ஐஸ்வர்யா மனிதாபிமானமே இல்லாமல் இதுவும் தன்னுடைய யுக்திகளில் ஒன்று என்று வாதாடுகிறார்.

முழுதாக பைத்தியம் போல் மாறிவிட்ட ஐஸ்வர்யாவை இனியும் பிக்பாஸ் வீட்டில் வைத்திருந்தால் அவருடைய மனநலம் மற்றும் உடல்நலத்திற்குத்தான் ஆபத்து என்பதால் இந்த வாரமாவது மக்களின் வாக்குகளுக்கு மதிப்பு கொடுத்து ஐஸ்வர்யாவை வெளியேற்றுவதுதான் பிக்பாஸூக்கு நல்லது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா? வைரலான வீடியோ குறித்து ஆலியா பட் கண்டனம்!

ஹோம்லி லுக்கில் அசத்தல் புகைப்படத் தொகுப்பை பகிர்ந்த எஸ்தர் அனில்!

ரெஜினாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

50 ஆண்டுகள் கதாநாயகனாக நடித்த பாலகிருஷ்ணா… புதிய சாதனை!

மீண்டும் இணைந்து நடிக்கும் கார்த்தி & ஜெயம் ரவி… இயக்குனர் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments