Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கடவுள் பெண்கள் கோயிலாக வரக்கூடாது என சொன்னது?- ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (14:40 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா. இதையடுத்து அவர் நடிப்பில்  பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன் என பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

இதில் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் படக்குழுவினரோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அப்போது ‘சபரிமலைக்கு பெண்கள் செல்லக் கூடாது என எதிர்ப்புகள் எழுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் “எந்த கடவுள் பெண்கள் கோயிலுக்கு வரக்கூடாது என சொன்னது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லக் கூடாது என மனிதர்கள்தான் சட்டத்தை இயற்றி வைத்துள்ளார்கள்.” என துணிச்சலாக பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு பரவலாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments