பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது.
இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் விரும்பினார் என்று பாக்யராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தை இப்போது ரீமேக் செய்து சசிக்குமார் நடிக்க உள்ளார். முதல் பாகத்தை எழுதி இயக்கிய பாக்யராஜே இந்த பாகத்துக்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். மேலும் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.
இதுவரை இந்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கிய சுந்தரபாண்டியன் மற்றும் இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.