தமிழ் சினிமாவில் பா ரஞ்சித்தின் அட்டகத்தி திரைப்படம் மூலமாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது காக்கா முட்டை திரைப்படம். அதன் பின்னர் கதாநாயகியாகத் தொடரச்சியாக நடித்து சில ஹிட்களைக் கொடுத்தார்.
அதன் பிறகு பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அதில் க பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாகின. ஆனால் அதன் பின்னர் அவர் மையக் கதாபாத்திரத்தில் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. அதனால் அவர் கைவசம் தற்போது தமிழில் படங்கள் இல்லை. ஆனால் தெலுங்கில் அவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களோடு நடித்து வருகிறார்.
இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் “ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் படங்களே இல்லை” எனப் பேசியிருந்தார். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இதற்கு பதில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. அதில் “இந்த ஆண்டில் நான் நடித்த ஒரு படம் (சங்கராந்திக்கு வஸ்துனாம்) பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது அவருக்குத் தெரியாது போல. மக்களுக்கு நல்ல படங்கள் கொடுக்கணும்னு நெனைக்குறேன். அதனால் ஏனோ தானோன்னு படங்கள் நடிக்க மாட்டேன். அதனால் ஒரு சின்ன இடைவெளி. சினிமாவ நான் விடமாட்டேன். சினிமாவும் என்ன விடாது” எனப் பேசியுள்ளார்.