ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் அவர் நடிப்பில் பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன் என பல படங்கள் ரிலீஸாகி தோல்விப் படங்களாக அமைந்தன. இதன் காரணமாக அவர் இப்போது தெலுங்கு சினிமாவில் முகாமிட்டு அங்கு படங்களில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்பொழுது ஃபர்ஹானா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் புகைப்படங்களைப் பகிர, அவை இணயத்தில் வைரல் ஆகி வருகின்றன.