சாந்தி சௌந்தர்ராஜன் படத்தில் நானா? ஐஸ்வர்யா ராஜேஷ் பதில்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (08:48 IST)
தடகள வீராங்கனை சாந்தியின் பயோபிக் எடுக்கும் இயக்குனர் ஜெயசீலன் தவச்செல்வி படம் குறித்து பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்ற தடகள வீராங்கனை சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆனால் அவருக்கு உடலில் டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பதால்  பாலியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவரிடம் இருந்து பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டன. மேலும் தான் பெண் என்று நிருபிக்க 9 ஆண் மருத்துவர்கள் அடங்கிய குழுவின் முன்னர் அவர் நிர்வாணமாக்க்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை அவருக்கான நீதிக் கிடைக்கப்படவே இல்லை. இந்நிலையில் இப்போது அவரின் போராட்ட வாழ்வை மையமாக வைத்து சாந்தி சௌந்தர்ராஜன் என்ற படத்தை இயக்குனர் ஜெயசீலன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, ரசுல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். இந்நிலையில் கதாநாயகி யார் என்பது குறித்து தமிழ்ப் புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எது நடந்ததோ அது….. நன்றாகவேவா? நடந்தது.. கரூர் சம்பவம் குறித்து இயக்குனர் பார்த்திபன்..

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சூட்டோடு சூடாக வெளியானது ‘லோகா 2’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்