Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் நடிகை உள்பட 3 நாயகிகள்: சுந்தர் சி அடுத்த படத்தின் அறிவிப்பு!

பிக்பாஸ் நடிகை உள்பட 3 நாயகிகள்: சுந்தர் சி அடுத்த படத்தின் அறிவிப்பு!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (12:04 IST)
பிக்பாஸ் நடிகை உள்பட 3 நாயகிகள்: சுந்தர் சி அடுத்த படத்தின் அறிவிப்பு!
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது 
 
சுந்தர் சி நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தை மணி செய்யோன் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிபிராஜ் நடித்த கட்டப்பாவ காணோம் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சாந்தினி தமிழரசன் மற்றும் ஹெபா பட்டேல் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 3 நடிகை அபிராமி வெங்கடாச்சலம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை வி.ஆர் டெல்லா பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அர்ஜுனுக்கு பாஜக ஒதுக்க விரும்பும் தொகுதி!