Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

ஐஸ்வர்யா ராஜேஷ் & யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ரிலீஸ்!

Advertiesment
Aishwarya rajesh

vinoth

, வெள்ளி, 12 ஜனவரி 2024 (07:11 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா.

இதையடுத்து அவர் நடிப்பில்  பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன் என பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் தன்னால் இப்போது அதிக கதைகளைக் கேட்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சிஸ்டர் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை சவரி முத்து இயக்க உள்ள நிலையில் யோகி பாபு மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டைட்டில் வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ஆகும் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்… கதிர் நடிப்பில் விகடன் தயாரிக்கும் புதிய வெப் தொடர்!