இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த சினிமா இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவரது ஒவ்வொரு படத்தையும் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் கொண்டாடுவார்கள். இந்திய சினிமா பிரபலங்கள் அவரது படத்தில் நடிப்பதை பெருமையாகக் கருதுகின்றனர்.
 
									
										
								
																	
	இந்நிலையில் நீண்ட காலமாகவே பல்வேறு இயக்குநர்கள் படமெடுக்க நினைத்து முடியாமல் போனது பொன்னியின் செல்வன் என்ற நாவல் கதை . அமரர் கல்கியின் கை வண்ணத்தில் உருவான இந்த நாவலை மையமாகக் கொண்டு, மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கிவருகிறார். பல முன்னணி நடிகர் நடிகர்கள் இதில் நடிக்கின்றனர்.
	 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இந்நிலையில் சென்னை பிரபல தனியார் நிறுவனத்தின் கிளை திறப்பு விழாவில்முன்னாள் உலக அழகியும் , நடிகையுமான  ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.
 
									
										
			        							
								
																	
	 
	அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழ் சினிமாவுக்கும் எனக்கும் பல ஆண்டுகளாகவே நெருக்கமாகவே தொடர்பு உள்ளது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படங்களில் நடிப்பது எப்பொழுதுமே சிறப்பான தருணம். படத்தைன் பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. மணிரத்னம் என்னுடைய குரு. எங்களது தொழில்ரீதியான  உறவில் அதிகப் பரீட்சயம் இருந்தாலும் கூட, அவர் விரும்பும்போதுதான் படத்தை குறித்த தகவலை உலகிற்கு கூறுவார்.
	 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	நடிகர் அஜித் சிறந்த நடிகர்,. ரசிகர்களிடமிருந்து அவருக்கும் கிடைக்கின்ற அன்பும் வெற்றியும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் அஜித் இதற்கெல்லாம் தகுதியானவர்தான். மேலும் கண்டுகொண்டேன்  கண்டுகொண்டேன் படத்தில் அவருக்கும் எனக்கும் அதிகமான  இடையே காட்சிகள் இல்லை என்றாலும் கூட அவரை படப்பிடிப்பின் போது சந்தித்துள்ளேன். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தது நினைவிருக்கிறது. ஒருவேளை அஜித்தை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளை தெரிவிக்க ஆர்மாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.