சமந்தாவை அடுத்து தீவிர நோயால் பாதிக்கப்பட்ட இன்னொரு நடிகை!
நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு மயோசிடிஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை மம்தா மோகன்தாஸ் என்ற நடிகை விட்டிலிகோ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
இது குறித்து நடிகை மம்தா மோகன்தாஸ் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது விட்டிலிகோ நோயின் பாதிப்பிலிருந்து தான் சற்று குணம் ஆகி வருவதாகவும் இந்த நோய் காரணமாக எனது நிறம் மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்
வருக்கு பல ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் ஆறுதல் கூறி நிச்சயம் நீங்கள் இந்த நோயிலிருந்து மீண்டு வருவீர்கள் என்று தெரிவித்துள்ளார்கள். நடிகை மம்தா மோகன் தாஸ் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் சிகிச்சை பெற்று குணமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, எனிமி உள்பட பல படங்களில் நடித்த மம்தா மோகன் தாஸ் தற்போது கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது