Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருட்டு டிவிடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் புகார்

திருட்டு டிவிடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் புகார்

Advertiesment
திருட்டு டிவிடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் புகார்
, வியாழன், 29 செப்டம்பர் 2016 (13:34 IST)
திருட்டு விசிடிக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராடி வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.


 
 
சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் நடித்த ‘தொடரி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்தும், திருட்டு விசிடிகளாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது.
 
பல கோடி முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இதுபோன்று ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து விற்கும் திருட்டு விசிடி பிரச்சினைகளால் திரைப்பட தொழிலே நசிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
எனவே, இப்பிரச்சினையை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம். எங்களது இளைய தளபதி நடிக்காத திரைப்படைமாக இப்படங்கள் இருந்த போதிலும் திரையுலகின் பிரச்சினையான இதை பொதுநலன் கருதி இப்பிரச்சினை மீது உடனடியாக விசாரணை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு இணையதள ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வதை உரிய தொழில்நுட்பங்களின் உதவியோடு தடுப்பதோடு திருட்டு விசிடியாக விற்பனை செய்வதை தடுத்து அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 
 
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் படத்தில் முதல் முறையாக இணையும் முன்னனி காமெடியன்கள்