Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயன் படத்தில் முதல் முறையாக இணையும் முன்னனி காமெடியன்கள்

சிவகார்த்திகேயன் படத்தில் முதல் முறையாக இணையும் முன்னனி காமெடியன்கள்
, வியாழன், 29 செப்டம்பர் 2016 (13:32 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரெமோ’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்தாக மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். 

 
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.
 
விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் நடிகர், நடிகையர் தேர்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இரண்டு முன்னணி காமெடியன்களான ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர் நடிக்கின்றனர்.
 
ஆர்.ஜே.பாலாஜி ‘தேவி’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கவலை வேண்டாம்’, ‘காற்று வெளியிடை’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அதேபோல், ரோபோ சங்கரும் ‘எஸ் 3’, ‘வீரசிவாஜி’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியான நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி - ரஜினி சந்திப்பு படங்கள்