ஷங்கர் படத்தில் நாயகியாக நடித்த சதாவுக்கு சகுனம் சரியில்லை. குறுகிய காலத்தில் ரசிகர்களால் மறக்கப்பட்டார். சுத்தமாக வாய்ப்புகளும் இல்லை. இந்நிலையில் அவரை தேடிப்பிடித்து ஒரு படத்தில் நாயகியாக்கியிருக்கிறார் மஜீத்.
விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் அதன் பிறகு சில படங்களை இயக்கினார். கடைசியில் ஹாலிவுட் படத்தை காப்பியடித்து காசு என்ற படத்தை எடுத்தார். படம் ப்ளாப்.
இந்நிலையில் வரும் 15 -ஆம் தேதி புதிய படத்தை தொடங்குகிறார். பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க அஞ்சலி மற்றும் சதாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் இருவரும்தான் இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள்.
இந்தப் படமாவது மஜீத்துக்கு வெற்றியாக அமையட்டும்.