பிரபல நடிகை சமந்தாவிற்கும், நாகார்ஜூனன் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் வெகு சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தற்போது விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் முதன்முதலாக கணவர் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான இந்த படத்தில் தல் திருமணம் செய்து கொண்ட நாகசைதன்யா-சமந்தா ஜோடி நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்னர் ஏற்கனவே இருவரும் நான்கு படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ரியல் ஜோடியாக இருக்கும் நாகசைதன்யா-சமந்தாவை ரீல் ஜோடியாக்கும் இயக்குனர் ஷிவ்நிர்வணா என்பது இந்த படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.