Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தள்ளிப் போகிறதா பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம்?

தள்ளிப் போகிறதா பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம்?
, திங்கள், 31 அக்டோபர் 2022 (09:54 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் முழுவதும் மோஷன் கேப்சரிங் முறையை பயன்படுத்தி அனிமேசன் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DisappointingAdipurish என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம் கிராபிக்ஸ் காட்சிகளை மீண்டும் உயர்ந்த தரத்துடன் உருவாக்க விரும்புவதாகவும், அதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தாவுக்கு ஆறுதல் வார்த்தைக் கூறி நம்பிக்கை அளிக்கும் திரையுலக பிரபலங்கள்!