ஜெயம் ரவி டிக் டிக் டிக் படத்திற்கு அடுத்து தற்போது நடித்திருக்கும் அடங்கமறு படத்தின் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது
டிக் டிக் டிக் படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட தயாரிப்பான சங்கமித்ரா படத்திற்காக தன்னை தயார்படுத்தி வந்தார் ஜெயம் ரவி. அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஆனதால் அந்த இடைவெளியில் குறுகிய காலத்தில் தற்போது அடங்கமறு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள அடங்கமறு படத்தில் சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்து போராடும் துணிச்சல் மிகுந்த போலீஸாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷிக் கண்ணா நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சாம் சி எஸ் இசையமைத்திருக்கும் அடங்கமறு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று வெளியாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.