Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னை விட இளம் வயது நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகைகள்!

Advertiesment
தன்னை விட இளம் வயது நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகைகள்!
, வியாழன், 7 பிப்ரவரி 2019 (17:51 IST)
சினிமாவில் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள்   60 வயது ஆனாலும், 20 வயது ஹீரோயினுடன் ஜோடி போட்டு நடனம் ஆடலாம். காதல் செய்யலாம். தை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால், தன்னை விட வயது குறைந்த ஹீரோக்களுடன் எந்த ஒரு ஹீரோயினும் நடிக்க முன்வர மாட்டார்கள் அப்படி நடித்த ஹீரோயின்கள் யார் என்பதை இப்போது பார்ப்போம்.



 
நயன்தாரா
 
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், இவரும் தன்னை விட ஒரு  வயது குறைந்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தில் நடித்தார். தற்போது தன்னை விட ஒரு வயது குறைந்தவரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 
 
சினேகா
 
சிரிப்பழகி என்று போற்றப்படும் நடிகை சினேகா தன்னைவிட 3 வயது குறைந்த தனுஷ் உடன் இணைந்து புதுப்பேட்டை என்ற படத்தில் நடித்தார்.  இதேபோல் தன்னை விட 3வயது இளையவரான சிம்புவுடனும் சிலம்பாட்டம் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். 
 
 
ஜோதிகா
 
ஜோதிகா திருமணத்திற்கு முன் வரை செம்ம உச்சத்தில் இருந்தவர், இவர் ரஜினி முதல் சிம்பு வரை அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார், இதில் சிம்பு இவரை விட வயது குறைந்தவர்கள் என்றாலும் மன்மதன், சரவணா என்று இரண்டு படங்களின் ஜோடியாக நடித்துள்ளார்.
 
 
கரீனா கபூர்
திருமணம் முடிந்தும் திரைக்கு வந்து கலக்கி வருகின்றார் கரீனா கபூர், இவர் தன்னை விட வயது குறைந்த இம்ரான் கான், அர்ஜுன் கபூருடன் நடித்து கலக்கியவர், இதில் அர்ஜுன் கபூருடன் முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்து சர்ச்சையை உண்டாக்கினார்.
 
ஐஸ்வர்யா ராய்
தற்போது உள்ள டாப் காதாநாயகிகளில் மிகவும் மூத்தவர் என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான் , இவர் தன்னை விட வயது குறைந்த அபிஷேக் பச்சனை தான் திருமணமே செய்துள்ளார், அதுமட்டுமின்றி சமீபத்தில் இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார், இவருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் சுமார் 8 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ராணி முகர்ஜி
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து தற்போது சினிமாவை விட்டு விலகியிருப்பவர் ராணி முகர்ஜி, இவர் தன்னை விட 3 வயது குறைவான ஷாகித் கபூருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்தார்.
 
ப்ரியங்கா சோப்ரா
கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வரும் ப்ரியங்கா தன்னை விட 3 வயது குறைவான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார்.  தற்போது தன்னைவிட 10 வயது குறைந்த பாப் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
 
காத்ரீனா கைப்
காத்ரீனா கைப் பாலிவுட் சினிமாவின் அனைத்து கான் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் வளர்ந்து வரும் நடிகர் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார், இவர் காத்ரீனாவை விட 2 வயது குறைந்தவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு போட்டியாக விஜய்சேதுபதி செய்யும் தரமான சம்பவம்!