Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளின் மறுமணம்: எனக்கு நெருக்கமானவர்களை மட்டும் அழைப்பேன் - ரஜினி!

Advertiesment
மகளின் மறுமணம்: எனக்கு நெருக்கமானவர்களை மட்டும் அழைப்பேன் - ரஜினி!
, வியாழன், 7 பிப்ரவரி 2019 (16:01 IST)
என் மகளின் மறுமணத்திற்கு எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும்  அழைப்பிதழ் கொடுத்து வருகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


 
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந். அவரின்  இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது.  இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுக்கும் வேளையில் பிஸியாக இருந்துவருகிறார்.
 
அந்தவகையில் ,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். 
 
இந்நிலையில் சென்னை தி-நகரில் உள்ள இசைஞானி இளையராஜாவின் வீட்டிற்கு சென்று அழைப்புவிடுத்த  ரஜினி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் எனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்ரூவராக மாறும் இந்திராணி முகர்ஜி? சிக்கலில் சிதம்பரம் ஃபேமிலி