Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்க்கெட் இல்லாத நடிகை வேண்டாம்… தயாரிப்பு நிறுவனம் அதிரடி!

மார்க்கெட் இல்லாத நடிகை வேண்டாம்… தயாரிப்பு நிறுவனம் அதிரடி!
, வியாழன், 8 ஜூன் 2017 (18:05 IST)
மார்க்கெட் இல்லாத ஹன்சிகாவை ‘சங்மித்ரா’வில் நடிக்கவைக்க முடியாது என தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டதாம்.


 

 
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. இந்தப் படத்தில் இளவரசியாக நடிக்க ஒப்பந்தமானார் ஸ்ருதி ஹாசன். அதற்காக தனி பயிற்சியாளரை வைத்து வாள் சண்டை கூட கற்றுக் கொண்டார். ஆனால், திடீரென அந்தப் படத்தில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டார். அடுத்ததாக யார் ஹீரோயினாக நடிப்பார் என்ற விவாதத்தில் முன்னால் நின்றது ஹன்சிகா தான்.
 
சுந்தர்.சி.யின் அதிகமான படங்களில் நடித்தவர் என்பதோடு, ‘புலி’ படத்தில் இளவரசியாக நடித்தவர் என்ற கூடுதல் தகுதியும் அவருக்கு இருந்தது. சுந்தர்.சி.யும் ஹன்சிகா பெயரை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் சிபாரிசு செய்தாராம். ஆனால், ‘தமிழிலும் மார்க்கெட் இல்லை, தெலுங்கிலும் மார்க்கெட் இல்லை. அவரை ஹீரோயினாகப் போட்டால் படத்தை எப்படி விற்பது?’ என்று கேட்டு ரிஜெக்ட் செய்துவிட்டாராம் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி ராமசாமி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித்தையே மிரள வைத்த நடிகர்!!