சென்னை 28' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பிரபலமான நடிகை விஜயலட்சுமி, திரைப்பட துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், 'சென்னை 28' படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்துடன் இணைந்து 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, படப்பிடிப்பிலும் பங்கேற்றார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.
பின்னர், 'அஞ்சாதே', 'வெண்ணிலா வீடு' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக, 'மிடில் கிளாஸ்' திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார்.
நடிகை விஜயலட்சுமி, தனது குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சூழலுக்காகவே சினிமாவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சினிமா படப்பிடிப்புகளின் நீண்ட கால அட்டவணை தன் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.