Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை த்ரிஷா யுனிசெஃபின் தூதராக நியமனம்

நடிகை த்ரிஷா யுனிசெஃபின் தூதராக நியமனம்
, திங்கள், 20 நவம்பர் 2017 (12:20 IST)
நடிகை த்ரிஷா ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் பிரபல தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார்.

 
சமீபத்தில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும்  விளம்பரத்தில் த்ரிஷா தோன்றி நடித்தார். தற்போது விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 'யுனிசெஃபின் பிரபல  தூதர்' என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர்.
 
த்ரிஷாவை யுனிசெஃப் தூதராக அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா  பேசுகையில், "இது எனக்குப் பெரிய கவுரவம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன். பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம்  கல்வி பயின்றால் குழந்தை திருமண முறையை ஒழித்துவிடலாம்," என்றார்.
 
தென்னிந்திய சினிமாவிலிருந்து ஒரு நடிகை யுனிசெஃப் அமைப்பின் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது இதுவே முதல்  முறையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?