Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்பவுமே பெஸ்ட்.. பெஸ்ட்..! ஹாட்ஸ்டாரில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் ‘தி லெஜெண்ட்’!

Legend
, ஞாயிறு, 5 மார்ச் 2023 (13:55 IST)
பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த தி லெஜெண்ட் படம் ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளர் தொழிலதிபர் அருள் சரவணன் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘தி லெஜெண்ட்’. பெரும் பொருட்செலவில் தயாரான இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கினர். இந்த படத்தில் ராய் லெட்சுமி, ஊர்வசி ரயதுல்லா, பிரபு, விவேக் என பலர் நடித்திருந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவே சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என கூறப்படுகிறது. அதனால் படத்தை ஓடிடியில் வெளியிட சரவணன் மறுத்ததாக அப்போது பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தி லெஜெண்ட் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாவதாக திடீர் அறிவிப்பு வெளியானதுடன், மார்ச் 3ம் தேதி வெளியானது. படம் ஓடிடியில் வெளியான நிலையில் கடந்த இரண்டு நாட்களில் நம்பர் 1 இடத்தை பெற்றிருப்பதாக அருள் சரவணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாசமாக சேலை அணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட அனுபமா!