Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாச்சிக்கு கதாநாயகி ஆன தமன்னா..? பட்ஜெட் எவ்ளோவ்னு தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க!

Advertiesment
அண்ணாச்சிக்கு கதாநாயகி ஆன தமன்னா..?  பட்ஜெட் எவ்ளோவ்னு தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க!
, சனி, 12 அக்டோபர் 2019 (12:39 IST)
சென்னையில் உள்ள பிரபல கடைகளில் ஒன்றாக சரவணா ஸ்டோர் பல வருடங்களாக இயங்கி வருகிறது. தொழிலில் தொடர் வளர்ச்சியை கண்டு அடுத்தது பல இடங்களில் பல்வேறு கிளைகள் உருவாகிவிட்டது. இதில் முக்கியமான ஒன்று தான் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர். இதன் உரிமையாளரான 'சரவணன் அருள்' குறுகிய காலத்தில் நடிகர்களுக்கு நிகராக ஃபேமஸ் ஆகிவிட்டார். 


 
தன்னுடைய கடை விளம்பரத்திற்கு தானே நடிப்பதெல்லாம் எந்த உரிமையாளரும் யோசித்துக்கூட பார்க்க மாட்டார்கள் . அதிலும் ஹன்சிகா, தமன்னா என பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு விளம்பர பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். அது சமூக வலைத்தளங்கில் வைரலாக பரவி ட்ரோல் செய்யப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து தொடர்ந்து தன் கடை விளம்பரங்களில் தானே நடித்து வந்தார் சரவணன் அருள். 
 
இதற்கிடையில்  சினிமா துறையில் நடிகர் சங்கம் நடத்திய விழா ஒன்றில் சரவணன் அருள் கலந்து கொண்டார். அதில் கலந்துகொண்டதால் என்னவோ அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்கில் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் பரவியது.  இதற்காக படக்குழுவும் நடிகை ஹன்சிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், இது வெறும் பொய்யான தகவல் செய்தி என்றும் என்னுடைய படம் குறித்து நானே அறிவிப்பேன் என்னுடைய ஹன்சிகா கோபமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
 
ஹன்சிகா நிராகரித்ததையடுத்து தற்போது தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி எப்படியாவது அண்ணாச்சியுடன் ஜோடி சேர சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்று படக்குழுவினர் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். அதற்கேற்றாற் போல்  தமன்னாவும் இதுகுறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை. எனவே, தமன்னா இந்த படத்தில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் அண்ணாச்சி நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியல் இயக்குனர்களான ஜேடி- ஜெர்ரி தான் இயக்குகின்றனர். இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 30 கோடி இந்த என்று கூறப்படுகிறது. முதல் படமே இத்தனை கோடி பட்ஜெட்டா என்று கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் வாய் பிளந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலேசியாவில் மாஸ் காட்டிய பிக்பாஸ் முகின்.. வைரல் வீடியோ