தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, அதன் பின் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கே அமிதாப்புடன் அவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் நடித்த தப்பாட் திரைப்படம் மிகப் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இதையடுத்து டாப்ஸி பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாக நடிகையாக வளம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது டாப்ஸி வித்தவுட் ஸ்லீவ்ஸ் உடையில் கியூட்டான ஹாட் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் தூக்கலான ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் அள்ளியுள்ளது.