Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகை சோனா வீட்டில் கத்தியோடு புகுந்து மிரட்டிய மர்ம நபர்கள்!

Advertiesment
பிரபல நடிகை சோனா வீட்டில் கத்தியோடு புகுந்து மிரட்டிய மர்ம நபர்கள்!

vinoth

, வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:06 IST)
தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக இருப்பவர் நடிகை சோனா.  90 களில் நிறைய படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன் பின்னர் சில படங்களில் கவர்ச்சி நடிகை வேடத்தில் நடித்தார். இடையில் பிரபல பாடகர் எஸ் பி பி சரண் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த சர்ச்சைகளால் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தே காணாமல் போன அவர், ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஸ்மோக்’ என்கிற வெப்சீரிஸ் மூலமாக இயக்குனராக கம்பேக் கொடுக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் வீட்டில் இரண்டு நபர்கள் கத்தியோடு புகுந்து அவரை மிரட்டிவிட்டு சென்றதாக போலீஸில் புகாரளித்துள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவர்கள் திருடர்களா இல்லை சோனாவின் விரோதிகளா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த்!