Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜா பயோபிக்கில் நடிக்க ஆசையா?... இயக்குனர் அருண் மாதேஸ்வரன் வெளியிட்ட பதிவு!

Advertiesment
இளையராஜா பயோபிக்கில் நடிக்க ஆசையா?... இயக்குனர் அருண் மாதேஸ்வரன் வெளியிட்ட பதிவு!

vinoth

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (15:25 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் திரைக்கதைக்காக இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவோடு நெருக்கமாக பழகிய தமிழ் சினிமா நட்சத்திரங்களை சந்தித்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகும் தகவல்களின் படி இன்னும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இளையராஜா படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரங்கள் தேவை என்றும் அதற்கான ஆடிஷன் வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளதாகவும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த ஆடிஷன் லலோயா கல்லூரி அருகே உள்ள லா ஸ்டுடியோஸில் நடக்க உள்ளது.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது.. நடிகர் சூரியின் இரங்கல் பதிவு..!