எனக்கு தமிழ் சினிமா பிடிக்காது… சர்ச்சையில் சிக்கிய பிதாமகன் சங்கீதா!

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:10 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் இருந்து நடித்து வந்தாலும் சங்கீதாவுக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படம்தான். அந்த படத்தில் கஞ்சா விற்கும் பெண்ணாக விக்ரம்முக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த படத்துக்குப் பின்னர் அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் குவியத்தொடங்கின.

அதே போல அவருக்கு தெலுங்கிலும் சில படங்களில் வேடங்கள் கிடைத்தன. ஆனாலும் அவர் உயிர் போன்ற மோசமான படங்களில் நடித்து தன் கேரியரை முடித்துக் கொண்டார். இப்போது டி வி நிகழ்ச்சிகள் என காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனக்கு தமிழ் சினிமாவைப் பிடிக்காது எனக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் “எனக்கு தமிழ் சினிமாவில் நடிக்க பிடிக்காது. தெலுங்கு சினிமாதான் பிடிக்கும். அங்குதான் நடிகர்களுக்கு மரியாதை அதிகமாகக் கொடுக்கிறார்கள்” எனப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments