முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் அவருடைய சகோதரர் அசோக்குமார் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருக்கிறார் என்பதும் அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கு முடிவடைவதற்கு முன்பே அசோக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமலாக்க துறையினரே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் வதந்தியை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு வதந்தி கிளம்பினால் அவரது ஆதரவாளர்கள் பதற்றம் ஆகி அவருடன் தொடர்பு கொள்ளும்போது அந்த போன் நம்பரை வைத்து செந்தில் பாலாஜி சகோதரரை கண்டுபிடித்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் பலிக்கவில்லை என அமலாக்கப்பிரிவு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.