Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வச்சு செஞ்சுட்டீங்களே... "ஸ்பைடர் மேன்" ஆன சமந்தாவின் ரியாக்ஷன்!

வச்சு செஞ்சுட்டீங்களே...
, வியாழன், 2 ஜூலை 2020 (14:17 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார்.

பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "தோட்டக்கலை தவிர .. யோகாவை நான் மிகவும் ரசிக்கிறேன், ஏனென்றால் என் கணவரும் நானும் சேர்ந்து ஒன்றாக யோகா செய்கிறோம். என கூறி பதிவிருந்தார். ஸ்பைடர் மேன் போஸ் கொண்ட அந்த யோகா ஸ்டில் இணையத்தால் வைரல் ஹிட் அடித்தது

இந்நிலையில் தற்போது சமந்தாவின் அந்த யோகா போட்டோவை ஸ்பைடர் மேன் போல் வடிவமைத்து "Spider-Man Fan From Home" என மீம் உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள். அதை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சமந்தா " ''மற்றவர்களை பார்த்து சிரிக்கும் பொழுது, நம்மை பார்த்தும் சிரித்துகொள்ள தெரிய வேண்டும்'' கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆல்யா பட் வீட்டில் தண்ணி குடிக்க வந்த பாம்பு - வீடியோ