Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெக்கேஷனை தனிமையில் கொண்டாடும் சமந்தா!

வெக்கேஷனை தனிமையில் கொண்டாடும் சமந்தா!
, சனி, 30 செப்டம்பர் 2023 (14:29 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

இந்த இரு பிராஜக்ட்களை முடித்துவிட்டு  அவர், சினிமாவில் இருந்து ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் தசை அழல்சுழற்சி நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். ஓய்வுக்காக தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது வெளிநாட்டில் வெக்கேஷனுக்கு சென்றுள்ள சமந்தா, அங்கு இருக்கும் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ நட்சத்திரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!