மீம்ஸ் அண்ட் ட்ரோல்ஸுக்கு சமந்தாவின் ரியாக்‌ஷன் – ரசிகரிடம் பகிர்ந்து கொண்ட ரகசியம்!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (10:00 IST)
நடிகை சமந்தா சமூகவலைதளத்தில் ரசிகர்கள் உடனான லைவ் சாட்டில் மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ்களை தாம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பது குறித்து பேசியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்தாலும் அதிக பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. தமிழில் இப்போது அவருக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மட்டுமே கைவசம் உள்ளது. மேலும் அவர் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பேமிலி மேன் சீசன் 2 அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா இப்போது சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் லைவ்வாக உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் ‘இணையத்தில் வரும் மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சமந்தா ‘முன்பெல்லாம் அதைப் பற்றியே இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து வருத்தப்படுவேன். இப்பொதெல்லாம் அதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்தில் ‘பார்க்கிங்’ இயக்குனருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இதுதான் வளர்ச்சி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன்… அத ஏன் செய்யல… இயக்குனர் செல்வராகவன் கேள்வி!

சாகறதுக்கு முதல் நாள் என் கூடதான் டான்ஸ் ஆடுனாங்க… சில்க் ஸ்மிதா பற்றி பகிர்ந்த பிரபல நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments