Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம்ந்தா நடிக்கும் புராணத் திரைப்படம் – ஜோடியாகும் நடிகர் இவர்தான்!

சம்ந்தா நடிக்கும் புராணத் திரைப்படம் – ஜோடியாகும் நடிகர் இவர்தான்!
, வியாழன், 21 ஜனவரி 2021 (16:56 IST)
நடிகை சமந்தா நடிக்க உள்ள சகுந்தலை என்ற புராண படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகரான தேவ் மோகன் நடிக்க உள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமானார்.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து பூஜா விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் இரு நடிகைகளின் ரசிகர்களும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இப்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா ஒப்பந்தம் ஆகியிருப்பது மேலும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மலையாள நடிகரான தேவ் மோகன் சமந்தாவின் ஜோடியாக இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழுப்படத்தையும் ஐபோனிலேயே எடுக்கும் வெற்றிமாறன் – ஆச்சர்யத்தில் கோலிவுட்!