Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிலம்பம் சுற்றி அசத்திய நடிகை சாய் தன்ஷிகா

சிலம்பம் சுற்றி அசத்திய நடிகை சாய் தன்ஷிகா
, திங்கள், 15 அக்டோபர் 2018 (10:45 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாய் தன்ஷிகா. இவர் நடிப்பில் வெளியான பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி ஆகிய படங்கள்  குறிப்பிடத்தக்கவை.
 
‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சாய் தன்ஷிகா. தன்னுடைய முதல் படத்தில் துணிச்சலான கல்லூரி மாணவியாக வலம் வந்தார். பிறகு அடுத்தடுத்து படங்கள் குவிந்தன. ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மகளாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து அசத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையால் தனி அடையாளத்தை பதித்து வருகிறார்.
webdunia
 
இந்நிலையில் நடிப்பைத் தவிர தற்காப்புக் கலைகளும் கற்று வருகிறார். தற்போது நான்கு மொழிகளில் தயாராகும் கிட்னா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சமுத்திரகனி இயக்கி நடிக்கிறார்.
 
இந்நிலையில் நடன இயக்குநர் சாண்டியின் டான்ஸ் ஸ்டூடியோவின் முதலாம் ஆண்டை கொண்டாட்ட சாய் தன்ஷிகா கலந்து கொண்டார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிலம்பம் சுற்றினார்.
 
சிலம்பத்தை வேகமாக சுழற்றிய தன்ஷிகாவை அனைவரும் பாராட்டினர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய் அப்படிப்பட்டவரு இல்லை: பிரபல நடிகர்