Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட்டிக்கு சென்று வந்த போது மரத்தில் மோதிய கார் –நடிகைக்கு படுகாயம்!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:03 IST)
கன்னட நடிகையாக ரிஷிகா சிங் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் ரிஷிகா சிங். இவரது சகோதரர் ஆதித்யா நடிகராகவும், தந்தை ராஜேந்திர சிங் பாபு இயக்குனராகவும் கன்னட சினிமாவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று வந்த ரிஷிகா சிங்கின் கார் கட்டுப்பாட்டை மீறி பெங்களூர் அருகே மவல்லிபுரா எனும் பகுதியில் மரம் ஒன்றின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமானது.

காரில் இருந்த ரிஷிகாவுக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவர் முழுவதும் குணமாகி வீடு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தியானது கன்னட சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments