மை லக்ஷ்மிஸ்.... பேத்தியை ஏந்திய ராதிகா மகளின் எமோஷ்னல் பதிவு!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (09:21 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான ராதிகா - சரத்குமாரின் குடும்பத்தில் இருந்து பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள். ராதிகா சரத்குமார் தம்பதிக்கு பிறந்த மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்துகொண்டார்.

அதையடுத்து அவர்களுக்கு கடந்த 2018ல் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியது.அதையடுத்து கடந்த மாதம் 15ம் தேதி தான் அழகிய பெண் குழந்தை பெற்றேடுத்தார் ரயன். ரயன் அப்பா சரத் குமார் மீதும் அம்மா ராதிகா மீதும் அதீத அன்பும் பாசமும் வைத்துள்ளனர். அவரக்ளை யாரேனும் கிண்டல் செய்து ட்ரோல் செய்தல் கூட விடமாட்டார். ட்விட்டரில் வெளித்துகட்டிவிட்டு தான் மறுவேலை செய்வார். அந்த அளவிற்கு பெற்றோர்கள் மீது பாசமுள்ளவர்.

அந்த பாசத்தின் வெளிப்பாடாக தனது மகளுக்கு அம்மாவின் பெயர் போன்றே "ராத்யா மிதுன்" என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் ரயன். இந்நிலையில் தற்போது ராதிகா தனது செல்ல பேத்தி ராத்யாவை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவரது மகள் ரயன்,  "ராதி மற்றும் ராது என்னுடைய லக்ஷ்மிகள்" என்று அழகான கேப்ஷனுடன் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த கியூட் புகைப்படம்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Radhi and Radhu

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நான் கொலைகாரியா...? கண்ணீருடன் சுஷாந்த் காதலி வெளியிட்ட வீடியோ!