35 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்த நடிகை, ஜனநாயகன் திரைப்படத்தில் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு, விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் திரைப்படத்தில், விஜய்க்கு அக்காவாக நடிகை ரேவதி நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளதாகவும், அவரது காட்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
35 ஆண்டுகள் கழித்து, விஜய்யின் படத்தில் மீண்டும் ரேவதி நடிக்க இருப்பது, இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், ஜூன் மாத இறுதியில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, படப்பிடிப்பு முடிந்ததும், விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில், இந்த படம் உருவாகி வருகிறது.