இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

Siva
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (18:21 IST)
'தி கேர்ள்ஃபிரண்ட்' பட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, சினிமா துறையில் நடிகைகளின் வேலை நேரம் குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
 
அவர் அதிக நேரம் உழைப்பதாக பட தயாரிப்பாளர் பாராட்டியபோது, அதை மறுத்த ராஷ்மிகா, "நான் இதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன்; என்னாலும் தொடர்ந்து செய்ய முடியாது" என்று கூறினார்.
 
"8 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்ப்பது உடல்நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துவிடும். இதற்கு பிறகு நாமே வருந்த வேண்டியிருக்கும்" என்று எச்சரித்த அவர், அலுவலகங்களில் உள்ளது போல, சினிமா துறையிலும் நிலையான 8 மணி நேர வேலை நேரம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.
 
மேலும், "தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும், தூக்கம் மற்றும் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நான் இனிமேல் இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் ராஷ்மிகா மந்தனா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

சிரஞ்சீவி & கார்த்திக்கு வில்லனாகும் அனுராக் காஷ்யப்!

அடுத்த கட்டுரையில்
Show comments