Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நள்ளிரவில் கதவை தட்டினார்: இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்

Advertiesment
நள்ளிரவில் கதவை தட்டினார்: இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்
, செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:01 IST)
பிரபல மலையாள நடிகை ஸ்ரீதேவிகா இயக்குனர் ஒருவர் நள்ளிரவில் கதவை தட்டு எனக்கு பாலியல் தொல்லை அளிக்க பார்த்ததாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 
மீடு விவகாரம் நாடெங்கும் பூதாகரமாக மாறிக்கொண்டு வருகிறது. பல சினிமா பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை தைரியமாக வெளியே சொல்லி வருகிறார்கள்.
 
அந்த வகையில் பிரபல மலையாள நடிகை ஸ்ரீதேவிகா, தான் சந்தித்த பாலியல் தொல்லைகளை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீதேவிகா தமிழில் ராமகிருஷ்ணா, ஞாபகங்கள், அன்பே வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் தான் திரையுலகில் சந்தித்த மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தபோது, இரவு என் ரூமின் கதவை யாரோ தட்டினர். ஆனால் நான் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து 2,3 நாட்கள் இதே போல் நடந்தது. பிறகு தான் அந்த படத்தின் இயக்குனரே இந்த கீழ்த்தரமான செயலை செய்தது எனக்கு தெரியவந்தது. இதனை வெளியே சொல்ல நினைத்தேன். அப்போதைய, நடிகர் சங்க செயலாளர் இதனை வெளியே சொன்னால் உன் சினிமா வாழ்க்கை பாழாகி விடும் என சொன்னார். அதனால் அப்போது அதை நான் வெளியே சொல்லவில்லை என ஸ்ரீதேவிகா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீ டு வில் சிம்பு பெயரை கூறிய நடிகை - பொங்கியெழுந்த ரசிகர்கள்