Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் இன்று

Advertiesment
நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் இன்று
, புதன், 17 அக்டோபர் 2018 (08:51 IST)

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழும் கீர்த்தி சுரேஷ் பிறந்த தினம் இன்று



கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்  பள்ளிப்படிப்பை முடித்தார்.

2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. எனினும் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன்,  ரெமோ ஆகிய படங்களில் இவர் அடுத்தடுத்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, தனுஷ்சுடன் தொடரி, சூர்யா உடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடன் சண்டை கோழி 2, விக்ரமுடன் சாமி 2,  மீண்டும் விஜய்யுடன் சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதை கீர்த்தி சுரேஷ் நிரூபித்தார். இதற்காக சிறந்த நடிகைக்கான விருதும் வென்றார்.  பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல காணப்படும் கீர்த்தி சுரேஷ், இயல்பான அழகால் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்கிறார். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ். 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வடசென்னை' படம் எப்படி? அதிகாலை காட்சி பார்த்தவர்களின் கருத்து