சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் சமீபத்தைய ஆண்டுகளில் பாலிவுட்டைத் தவிர்த்து கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.
அதன் பின்னர் அவரே இயக்கி நடித்து, தயாரித்த எமர்ஜென்ஸி படம் ரிலீஸாகி அதுவும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மாதவனோடு இணைந்து தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். தேசிய விருதுகள் உள்ளிட்டப் பல விருதுகளைப் பெற்றுள்ள கங்கனா, அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதில் “ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருதில்லை. அதை அமெரிக்கர்களே வைத்துக்கொள்ளட்டும். நமக்கு தேசிய விருதுகளே போதும். ஒவ்வொரு இந்தியனுக்கும் அதுதான் பெரிய விருது” எனக் கூறியுள்ளார்.