திருமணத்துக்குக் காலாவதி தேதி வேண்டும்… நடிகை கஜோல் பேச்சு!

vinoth
சனி, 15 நவம்பர் 2025 (11:33 IST)
பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் இந்தி சினிமாவின் ஸ்டார் நடிகையாக பல ஆண்டுகளாக ஜொலித்துகொண்டிருக்கிறார். இவர் தமிழிலும் மின்சாரக் கனவு படத்திலும் நடித்துள்ளார். 50 வயதாகும் இவர் இந்தி , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிக் கவனம் பெற்றது.

அவர் ’டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்’ என்ற நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் பல சர்ச்சையான விஷயங்களைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் திருமண வாழ்க்கைப் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதில் “திருமணத்துக்கு ஒரு காலாவதி தேதி வேண்டும். அதே போல அதை திருமணத்தைப் புதுப்பித்தும் கொள்ளும் தேதியும் வேண்டும். அப்போதுதான் அந்த உறவில் ஒருவர் அதிக காலத்துக்குப் பாதிக்கப்பட மாட்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்துக்குக் காலாவதி தேதி வேண்டும்… நடிகை கஜோல் பேச்சு!

மருத்துவமனையில் தர்மேந்திராவை ரகசியமாக வீடியோ எடுத்த ஊழியர் கைது!

சுந்தர் சி வெளியேற்றம்… ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யாராக இருக்கும்?

சம்பளமே வாங்காம 20 படங்களுக்கு இசையமைத்த இளையராஜா!.. பிரபலம் பேட்டி!..

பாசிட்டிவ் விமர்சனம்… ஆனாலும் லக்கி பாஸ்கர் முதல் நாள் வசூலை எட்ட முடியாத காந்தா!

அடுத்த கட்டுரையில்