ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான ரஷித் கான், ஒரு பெண்ணுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலானதையடுத்து, தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அந்த பெண் உண்மையிலேயே தனது மனைவிதான் என்று உறுதிப்படுத்திய ரஷித் கான், தனது இரண்டாவது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி நடந்தது என்றார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், "நான் எப்போதும் விரும்பிய அன்பு, அமைதி மற்றும் உறவை உள்ளடக்கிய ஒரு பெண்ணை மணந்தேன். அவர் என் மனைவி; மறைப்பதற்கு எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ நெதர்லாந்தில் நடந்த ரஷித் கான் அறக்கட்டளை நிறுவனத்தின் தொடக்க விழாவில் எடுக்கப்பட்டது.
கிரிக்கெட்டில் 108 டி20 சர்வதேசப் போட்டிகளில் 182 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ரஷித் கான், ஆசியக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.