பிரபல முன்னாள் உலக அழகி மற்றும் பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரமான ஜொலிப்பவர் பிரியங்கா சோப்ரா ஆவார். இவர் தன் காதலர் நிக் ஜோன்சனை சென்ற வருடம் கோலாகலமான, பிரமாண்டமான முறையில் திருமணம் செய்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள மேடன்ம் துஸ்லாத் அருங்காட்சிகத்தில் அவரது மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது அவருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை பிரதான தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மேடம்துஸ்லாத்துக்கு பல நாடுகளில் அருங்காட்சியங்கள் உள்ளன. பல பிரபலங்களின் உருவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவர்களுடன் பிரியங்கா சோப்ராவின் சிலையும் வைக்கப்படுள்ளது. இந்திய நடிகைக்குக் கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
இந்த மெழுகுச்சிலையுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது அவை வைரலாகி வருகிறது.